ஆஸ்கார் விருது விழாவில் பரபரப்பு - மேடை தொகுப்பாளர் கன்னத்தில் ஓங்கி அறைந்த வில் ஸ்மித் - வைரல் வீடியோ

slapped Excitement oscar-award stage-presenter Will Smith ஆஸ்கார் விருது மேடை-தொகுப்பாளர் வில்ஸ்மித் அறைந்தார்
By Nandhini Mar 28, 2022 04:27 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை ‘கிங் ரிச்சர்ட்’ படத்திற்காக வில்ஸ்மித் வென்றுள்ளார்.

சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது கோடா திரைப்படத்தில் நடித்த டிராய் கோட்சருக்கு வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை West Side Story படத்தில் நடித்த ஆரினா டிபோஸ் பெற்றார்.

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளர் கிறிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவியின் Hair Style பற்றி அனைவர் முன்பும் கேலி செய்துக்கொண்டிருந்தார். 

ஆரம்பத்தில் சிரித்துக்கொண்டிருந்த வில் ஸ்மித், ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாமல் மேடைக்கு ஏறி வந்தார். அப்போது, தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு கீழே இறங்கிச் சென்றார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத தொகுப்பாளர் கிறிஸ் ராக் சுதாரித்துக் கொண்டு விழாவினை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.       

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.