50 ஆண்டுகளுக்குப் பின் நடிகையிடம் மன்னிப்பு கேட்ட ஆஸ்கர் அகாடமி - ஏன்?
சமூக செயல்பாட்டாளரும், நடிகையுமான சாஷீன் லிட்டில்ஃபெதரிடம் ஆஸ்கர் குழு மன்னிப்பு கோரியுள்ளது.
ஆஸ்கர் விருது
'தி காட்பாதர்' என்ற திரைப்படத்திற்காக 1973-ம் ஆண்டு மார்ச் 27-ந் தேதி நடைபெற்ற 45-வது ஆஸ்கர் விழாவில் விருது வழங்கப்பட்டது. இப்படத்திற்கு சிறந்த படம், சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த நடிகர் என மூன்று விருதுகள் கிடைத்தன.

மார்லன் ப்ராண்டோ இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரமான 'விட்டொ கார்லியோனி' என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் அதற்காக சிறந்த நடிகருக்கான விருது அரங்கில் அறிவிக்கப்பட்டது.
மார்லன் பிராண்டொ
அனால் அவர் அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை, அவருக்கு பதில் அந்த மேடைக்கு பூர்வக்குடி இனத்தை சேர்ந்த செயல்பாட்டாளர் சாஷீன் லிட்டில்ஃபெதர் மேடைக்கு சென்ற மைக் எடுத்து மார்லன் பிராண்டொ அவரின் கடிதத்தை படிக்க தொடங்கினார்.

"திரைத்துறையில் அமெரிக்க பூர்விக குடிகள் மிகவும் மோசமாக நடத்தப்படுவதால் மார்லன் பிராண்டோ இந்த விருதை வாங்க மறுத்துவிட்டார்" என கூறப்பட்டிருந்த கடிதத்தை படித்துவிட்டு அவர் இறங்கி சென்றுவிட்டார்.
சாஷீன் லிட்டில்ஃபெதர்
அவரது கடிததமும் சாஷீன் அதை படித்ததும் அரங்கை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. இச்சம்பவத்திற்கு பின், 26 வயது உடைய சாஷீன் பல இன்னல்களை சந்திக்க நேரிட்டது. பல அவமானங்களையும் சந்தித்தார்.
அன்று நடந்த ஆஸ்கர் விழாவின் போது, நடிகர் ஜான் வெய்ன் என்பவரால் தாக்கப்பட்டார். மேலும் அவையில் இருந்த அனைவரும் அவரை அவமதிக்கும் விதத்தில் சைகைகளும் செய்தனர். அவருக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். இச்சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகளை கடந்த நிலையில்,
அவமதிப்பு
தற்போது 75 வயதுடைய சாஷீனிடம் ஆஸ்கர் குழு மன்னிப்பு கோரியுள்ளது. ஆஸ்கர் குழுவின் முன்னாள் தலைவர் டேவிட், ரூபின் சாஷீனுக்கு எழுதியிருந்த கடிதத்தில், "திரைத்துறையில் நீங்கள் இத்தனை ஆண்டுகாலம் எதிர்கொண்ட சுமையையும், இழப்பையும் ஈடு செய்ய முடியாது.
உங்களது துணிச்சல் நீண்டகாலமாக அங்கீகரிக்கப்படவில்லை. அதற்காக ஆழ்ந்த மன்னிப்பு கோருகிறோம்" என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சாஷீன் கூறியதாவது,
மன்னிப்பு
"ஆஸ்கர் குழு 50 ஆண்டுகளுக்கு பிறகு மன்னிப்பு கோரியுள்ளது. பூர்வகுடி மக்களாகிய நாங்கள் மிகவும் பொறுமையானவர்கள். இந்த நாளை பார்க்கும் வரை நான் உயிருடன் இருப்பேன் என எதிர்பார்க்கவில்லை.
இந்த நிகழ்வு நடந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதற்குள் எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை பார்க்கும் போது நெகிழ்ச்சியாக இருக்கிறது". என்று தெரிவித்துள்ளார்.