மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : நாடு முழுவதும் ஏப்ரல் 10,11-ம் தேதிகளில் தடுப்பு ஒத்திகை

COVID-19
By Irumporai Mar 25, 2023 01:11 PM GMT
Report

நாடுமுழுவதும் ஏப்ரல் 10,11ம் தேதிகளில் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடந்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது

அதிகரிக்கும் கொரோனா

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்தாலும் அதற்கான முறையான பரிசோதனைகள் ஏதும் நடக்கவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை செயலாளர்தெரிவித்துள்ளார்.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : நாடு முழுவதும் ஏப்ரல் 10,11-ம் தேதிகளில் தடுப்பு ஒத்திகை | Orona Prevention Exercise On April 10 And 11orona-prevention-exercise-on-april-10-and-11

இன்று ஒரு நாள் மட்டுமே கொரோனா பாதிப்பு 1500-ஐ தாண்டியது, இதனால் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

தடுப்பு ஒத்திகை

அதில், கொரோனா பாதிப்புள்ளவர்களுக்கு சுவாச பிரச்சனை அதிகம் உள்ளதாகவும் முடிந்த அளவிற்கு சீக்கிரம் அவர்கள் பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, கொரோனா மற்றும் பருவநிலை மாறுபாடு கரணமாக பரவும் காய்ச்சலை எதிர்கொள்ள நாடுமுழுவதும் ஏப்ரல் 10,11ம் தேதிகளில் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடந்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவல் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.