நாடு முழுவதும் 6,115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

COVID-19
By Irumporai Apr 08, 2023 05:51 AM GMT
Report

இந்தியாவில் இன்று ஒரு நாளில் மட்டும் 6,115 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

  கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது, அந்த வகையில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 28,303 லிருந்து 31,194 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,954 ஆக உள்ளது.

நாடு முழுவதும் 6,115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி | Orona Infection Across The Country

  அதிகரிக்கும் கொரோனா

இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,89,111 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 220,66,22,663 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,963 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.