1 1/2 வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்

Chennai
By Fathima Aug 25, 2026 04:07 AM GMT
Report

18 Months Old Baby Organ Donar in Tamilnadu: மூளைச்சாவு அடைந்த ஒன்றரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிறந்து ஒன்றரை வயதே ஆன குழந்தை ஹைட்ரோசெபாலஸ்(மூளைத் தண்டுவட நீர் தலைக்குள்ளேயே சேகரமாகி திசுக்களில் பாதிப்பை ஏற்படுத்தும்) எனப்படும் பிறவிக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டு கடந்த 6 நாட்களாக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது.

நாளுக்கு நாள் குழந்தையின் நிலை மோசமடைய மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதும், உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தது.

குழந்தை மூளைச்சாவு அடைந்த நிலையில் குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்வது என குழந்தையின் பெற்றோர் முடிவெடுத்தனர்.

இதனை தொடர்ந்து இதயம், சிறுநீரகம் தானமாக பெறப்பட்டது, 1 வயது 7 மாதங்களே ஆன மிக குறைந்த வயதில் தானமாக பெறப்பட்டுள்ளது.