வாகனங்கள் மூலம்மளிகை பொருட்கள் விற்க ஏற்பாடு- விக்கிரம ராஜா தகவல்!

vehicles vickramaraja
By Irumporai May 28, 2021 03:54 PM GMT
Report

தமிழகம் முழுவதும் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

 ஊரடங்கு நீட்டிப்புக்கு வரவேற்பு தெரிவித்த அவர், ஏற்கனவே நடைமுறையில் உள்ள காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை போன்று, மளிகைப் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

 மேலும், இந்த ஊரடங்கு  சூழலை பயன்படுத்தி அதிக விலைக்கு விற்றால், அவர்கள் குறித்து புகாரளிக்கலாம் என்றும் வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா குறிப்பிட்டார்.