"பாரதிய ஜனதா தொழிற்சங்க பேரவை" என்ற ஒரு அமைப்பு கிடையாது : அண்ணாமலை அறிக்கை
பாரதிய ஜனதா கட்சியில் "பாரதிய ஜனதா தொழிற்சங்க பேரவை" என்ற ஒரு அமைப்பு கிடையாது என்று தமிழக பாஜக அறிவித்துள்ளது.
தொழிற்சங்க பேரவை இல்லை
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக பாரதிய ஜனதா கட்சியில் பாரதிய ஜனதா தொழிற்சங்க பேரவை என்ற அமைப்பு உள்ளதாகவும், அந்த அமைப்பிற்கு திரு. K. இராஜு என்பவர் மாநில தலைவர் என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார்.
பாரதிய ஜனதா கட்சியில் "பாரதிய ஜனதா தொழிற்சங்க பேரவை" என்ற ஒரு அமைப்பு கிடையாது!
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) September 12, 2022
கட்சி பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதால் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்!@annamalai_k @KesavaVinayakan pic.twitter.com/CFUM3kPExp
சட்டப்படி நடவடிக்கை
தமிழக பாரதிய ஜனதா கட்சியில் பாரதிய ஜனதா தொழிற்சங்க பேரவை என்கின்ற ஒரு அமைப்பு கிடையாது.

கட்சியின் சின்னம், பாரத பிரதமரின் புகைப்படம் மற்றும் தேசிய தலைவர்களின் புகைப்படங்களை தவறுதலாக உபயோகப்படுத்தினால், உபயோகப்படுத்துபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதனை உறுதியாக தெரிவித்து கொள்கிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.