மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்.., 6 பேருக்கு மறுவாழ்வு
நீலகிரி மாவட்டம் குன்னூர் செல்வி நகரை சேர்ந்த ராமகிருஷ்ணனின்மகன் மோனிக்ராஜ் (22). இவர் விவசாயி மற்றும் உடல்நலப் பயிற்சியாளராக இருந்தார்.
கடந்த மார்ச் 11ஆம் தேதி காலை தனது தோட்டத்தில் மோட்டாரை இயக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது.
இதனால் அவர் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். அதன்பின் மோனிக்ராஜ் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மார்ச் 13ஆம் தேதி மருத்துவர்கள் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக அறிவித்தனர்.
இதையடுத்து மோனிக்ராஜின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடிவு செய்தனர்.
அவர் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதன் மூலம் மொத்தம் 6 பேருக்கு புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது.
உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட பிறகு மோனிக்ராஜின் உடல் அரசு மரியாதையுடன் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன.