இனிமேல் சாதாரண குடிமகன் தேர்தலில் போட்டியிட முடியாது: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி
தேர்தலுக்கு பணம் கொடுக்கப்பட்டு வாக்குபெரும் கட்சிகளுக்கு மத்தியில் இனி ஒரு சாமானியன் தேர்தலில் போட்டியிடுவது பற்றி நினைத்து பார்க்க முடியுமா என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 500 முதல் 5000 வரையில் தேர்தலுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது அனைத்து தொகுதியிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்தை கேள்வி குறியாக்கி உள்ளது. இனி தமிழகத்தில் சாதாரண ஒரு குடிமகன் போட்டியிட நினைத்து பார்க்க முடியுமா என கேள்வி எழுகிறது. தேர்தல் ஆணையம் தேர்தலை முறையாக நடத்தாதற்கு பொறுப்பேற்க வேண்டும். அரசு நிர்வாகத்தின் துணையுடன் பண பட்டுவாட கோவை போன்ற இடங்களில் நடைபெற்று ள்ளது.
இதை யாறும் தடுக்கவில்லை இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் உண்மையான மக்களின் பிரதிநிதியாக இருக்க மாட்டார்கள். வேட்பாளர்கள் வாக்கு கேட்கவே செல்லாமல் ஹவாலா ஆப்பரேட்டர்கள் மூலம் பண பட்டுவாடா செய்துள்ளனர். தமிழகத்தில் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்த கூடாது.
வாக்கு அபகரிப்பு செய்தது பயங்கரவாதம் எனவே தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே ஐ.நா வே முறைகேடுகள் நடைபெற்றதால் தங்களுடைய பார்வையாளர்களை அனுப்பி தான் பார்வையிடுகின்றார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, ஏப்ரல் 22 ஆம் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பாக சென்னையில் உண்ணா விரத போராட்டம் நடத்த உள்ளதாக கூறினார்.