தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு காவிரி நீர் திறக்க வேண்டும் - மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு

Tamil nadu Karnataka
By Vinoja Jul 30, 2026 03:30 PM GMT
Report

தமிழ்நாட்டின் நீர் தேவையை கருத்தில் கொண்டு, காவிரியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3,500 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்பு காவிரி ஒழுங்காற்றுக் குழு இதே உத்தரவை பிறப்பித்திருந்த நிலையில், கர்நாடக அரசு அதனை ஏற்க மறுத்தது. மேலும், மேகதாது அணை விவகாரத்தையும் முன்வைத்தது.

தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு காவிரி நீர் திறக்க வேண்டும் - மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு | Orders Karnataka To Open Cauvery For Tamil Nadu

காவிரி நீர் திறப்பில் புதிய உத்தரவு 

இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காவிரி நீர் திறக்கப்படாததால், டெல்டா மாவட்டங்களில் விவசாயத்திற்குத் தேவையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டு வறட்சி நிலை உருவாகும் அபாயம் ஏற்பட்டது.

இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரைப்படி, விநாடிக்கு 3,500 கன அடி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் டெல்லியில் உள்ள நிலையில், ஆணையத்தின் உத்தரவு தொடர்பாக கர்நாடக பிரதிநிதிகள் அவரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.