சர்ச்சை பேச்சு; கனல் கண்ணன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
பெரியார் சிலை குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் கனல் கண்ணண் மீது 3 மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தந்தை பெரியார் திராவிட கழக பிரமுகர் குமரன் மனு
சென்னை மதுரவாயலில் நடந்த ஒரு கூட்டத்தில் சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், "ஸ்ரீரங்கம் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும்" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இதையடுத்து, அவருக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தந்தை பெரியார் திராவிடக்கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், பொது அமைதியை சீர்குலைத்தல் சட்டப்பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கனல் கண்ணன், மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நீதிபதி முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து தற்போது வழக்குப்பதிவு செய்து 5 மாதங்களாகியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என தந்தை பெரியார் திராவிட கழக பிரமுகர் குமரன் மனு அளித்ததால் வழக்கில் போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கனல் கண்ணன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.