மிரட்டும் கொரோனா , தனியார் நிறுவனங்களை மூட உத்தரவு !

lockdown delhi privatecompnies
By Irumporai Jan 11, 2022 06:45 AM GMT
Report

கொரோனா அதிகரிப்பால் திருத்தப்பட்ட வழிமுறைகளை பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டது. டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் தற்போதைக்கு அனைத்து தனியார் அலுவலகங்களையும் மூட உத்தரவிட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ள தனியார் அலுவலகங்கள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்குப் பிறகு, இனி டெல்லியில் உள்ள தனியார் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டில் இருந்து மட்டுமே பணியாற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மிரட்டும் கொரோனா , தனியார் நிறுவனங்களை மூட உத்தரவு ! | Order To Close Private Companies In Delhi

மேலும், அனைத்து உணவகங்களும், பார்களும் மூடப்பட்டுள்ளன. புதிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் வரும் நாட்களில் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 தலைநகர் டெல்லியில் கொரோனாவின் அச்சுறுத்தல் டெல்லி அரசின் பதற்றத்தை அதிகரித்துள்ளது. தேசிய தலைநகரில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 19,166 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இதுவரை 15,68,896 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் கொரோனா நோயால் எண்ணிக்கை 14,77,913 ஆக உள்ளது.