இலவசங்களை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது : உச்சநீதிமன்றம் கருத்து

Supreme Court of India
By Irumporai Aug 11, 2022 07:18 AM GMT
Report

இலவசங்களை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 

தேர்தல் சமயத்தில் இலவசங்களை அறிவிப்பதற்கு தடை விதிக்கக்கோரி அஸ்வினி உபாத்யாய் தொடர்ந்த வழக்கு  உச்ச நீதிமன்றத்தில்இன்று விசாரணைக்கு வந்தது. 

இலவசங்கள் தேவையா

அப்போது தலைமை நீதிபதி பொருளாதார இழப்பு, மக்கள் நலன் இரண்டுக்கும் ஒரு சமநிலையில் இருக்க வேண்டும் அதனால் தான் இந்த விவகாரத்தில் உங்கள் ஒவ்வொருவரின் கருத்து, பார்வை மற்றும் எண்ணங்களை முன்மொழிய கூறுகிறோம்.

தேர்தலுக்கு முன் தேர்தல் அறிக்கையை அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டிய அவசியமில்லையா? இலவசத் திட்ட அறிவிப்புகள் தீவிரமான பிரச்சினை என்பதை யாரும் மறுப்பதற்கில்லை தேர்தல் வாக்குறுதி அறிக்கைகளை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பார்களா ?

செய்திதாளில் படித்தோம்

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் பதிலை செய்திதாளில் படித்தோமே தவிர நேற்று இரவு வரை தங்களுக்கு கிடைக்கவில்லை.

இலவசங்களை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது  : உச்சநீதிமன்றம் கருத்து | Order Not To Give Freebies Supreme Court

தேர்தல் ஆணையம் சார்பில் அவ்வாறு தாக்கல் செய்ய வேண்டும் என கட்டாயம் இல்லை பெரும்பாலான தேர்தல் இலவச வாக்குறுதிகள் அறிக்கையில் இடம்பெறுவதில்லை என வாதிடப்பட்டது.

கட்டணமில்லா பேருந்து திட்டம் இலவசமா

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடும் போது இலவசத் திட்ட அறிவிப்புகள் ஒரு சிக்கலான விவகாரம் இதை ஆராய போதுமான தகவல்கள் தேவை கட்டணமில்லா பேருந்து திட்டம் இலவசமா? என கேள்வி எழுப்பினார்.

இலவசங்களை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது  : உச்சநீதிமன்றம் கருத்து | Order Not To Give Freebies Supreme Court

ஆம் ஆத்மி கட்சி தரப்பில் இலவசத் திட்டங்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன என வாதிடப்பட்டது.

மத்திய அரசு தரப்பில் வாதிடும் போது இலவச அறிவிப்புகள் வாயிலாகத்தான் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றால், நாம் பொருளாதார பேரழிவை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறோம் என வாதிடப்பட்டது.

இலவசங்களை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது

ஆகவே  இலவசங்களை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது ஜனநாயக விரோத செயல் என்பதால் அதனை பரிசீலிக்க மாட்டோம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது