தமிழகத்திற்குஆரஞ்சு அலர்ட் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் மழைக்கான சீசன் தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் தொடங்கிய மழை சீசன்
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் குறிப்பாக தஞ்சை நாகை திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது அந்த வகையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஆரஞ்சு அலர்ட்
அதன்படி தமிழகத்தில் இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அறிவித்துள்ளது
தமிழகத்தில் கன மழை
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் சில இடங்களில் கன மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் சென்னை செங்கல்பட்டு வேலூர் திருப்பத்தூர் கள்ளக்குறிச்சி தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது