3 நாட்களுக்கு Orange Alert - தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

Tamil nadu TN Weather Weather
By Vidhya Senthil Aug 10, 2024 10:43 AM GMT
Report

 தமிழகத்தில் நாளை திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை ஆரஞ்சு அலெர்ட் விடுத்து வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை மையம்

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும்,ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

3 நாட்களுக்கு Orange Alert - தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? | Orange Alert For Next 3 Days In Tamil Nadu

நாளை (ஆகஸ்ட் 11 )தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 - 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்;

கொட்டித்தீர்த்த கனமழை; பெங்களூரில் குளமான சாலைகள் - விமான சேவை பாதிப்பு!

கொட்டித்தீர்த்த கனமழை; பெங்களூரில் குளமான சாலைகள் - விமான சேவை பாதிப்பு!

 எச்சரிக்கை

12.08.2024: நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், விருதுநகர், மதுரை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

3 நாட்களுக்கு Orange Alert - தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? | Orange Alert For Next 3 Days In Tamil Nadu

13.08.2024: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கன முதல் மிக கனமழையும்; தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

14.08.2024: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 - 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.