கேரளாவில் உள்ள 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
கேரளா மாநிலத்தில் ஒரு வரகாலமாக பெய்து வந்த கனமழை காரணமாக நீர் நிலைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கேரளா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
மேற்கு தொடர்ச்சி மழையால் இடுக்கி அணையின் நீர் அளவு அதிகரித்துள்ளது. கேரளா மாநிலத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து உள்ளதால் 8 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கையும்,
5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையும், ஒரு மாவட்டத்திற்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதன் இடையில் மழையால் வீடுகள் இடித்தும் வெள்ளத்தில் சிக்கியும் 20 பேர் பலியாகி உள்ளனர். மலையோரம் பகுதிகளில் நிலச்சரிவும் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியும் உள்ளது.
இதனால் இங்கு இருந்த வீடுகள் சேதம் அடைந்தால் பாதிக்க பட்டவர்களை பாதுகாப்பான இடத்தில தங்க வைத்துள்ளார்.
இதற்காக கேரளா மாநிலத்தில் ஆயிரக்கணக்கான முகாம்கள் திறக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பாதுகாப்பாக தங்கவைத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.