ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக பி.டி.உஷா தேர்வு - ஓபிஎஸ் வாழ்த்து

ADMK AIADMK O. Panneerselvam
By Thahir Nov 28, 2022 11:30 PM GMT
Report

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக பி.டி.உஷா தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் வாழ்த்து 

அண்மையில் பாஜக சார்பில் மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் பி.டி.உஷா . இந்த நிலையில் 58 வயதான பி.டி.உஷா இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

ops-wishes-to-pt-usha

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தியா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக போட்டியிட வேறு யாரும் மனு தாக்கல் செய்யாத காரணத்தினால் பி.டி.உஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ops-wishes-to-pt-usha

இந்த நிலையில், பி.டி.உஷாவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பி.டி.உஷாவுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.