நான் மத்திய அமைச்சராவது அவர் கையில்தான்.. ஓ.பி.எஸ் நம்பிக்கை!

O Paneer Selvam BJP Narendra Modi Lok Sabha Election 2024
By Karthikraja Jun 03, 2024 05:24 AM GMT
Report

 மத்திய அமைச்சர் ஆவது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

ஓ.பி.எஸ்

பாஜக ஆதரவுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார். நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.  

நான் மத்திய அமைச்சராவது அவர் கையில்தான்.. ஓ.பி.எஸ் நம்பிக்கை! | Ops Will Become Central Minister Ops Answer

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் “நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் இந்திய திருநாட்டை யார் ஆள வேண்டும் என்பதற்காக நடைபெற்றுள்ளது. பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் 3வது முறையாக பிரதமராக வருவதற்கு நல்ல சூழல் அமைந்துள்ளது. 

ராமநாதபுரத்தில் வெற்றி பெறுவாரா ஓபிஎஸ்? பரபரப்பு தேர்தல் கருத்துக்கணிப்பு

ராமநாதபுரத்தில் வெற்றி பெறுவாரா ஓபிஎஸ்? பரபரப்பு தேர்தல் கருத்துக்கணிப்பு

அமைச்சர் பதவி

என்னை பொருத்தவரை பலன்களை எதிர்பார்த்து கட்சி வேலை செய்பவன் நான் அல்ல. கட்சிக்கு விசுவாசமாக உழைப்பவன். என்னுடைய வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது. நான் மத்திய அமைச்சராவது இறைவன் கையில்தான் உள்ளது. இன்றைய அரசியல் சூழ்நிலையில் நாட்டு நடப்புகளை, அரசு செய்கின்ற தவறுகளை சுட்டிக் காட்டுகின்ற ஒரே இயக்கமாக அதிமுக உரிமை மீட்பு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

நான் மத்திய அமைச்சராவது அவர் கையில்தான்.. ஓ.பி.எஸ் நம்பிக்கை! | Ops Will Become Central Minister Ops Answer

அரசியல் நடப்புகளை மிகத் துல்லியமாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். யாரால் எப்படி இந்த கட்சி சின்னா பின்னமாக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். அது நாடாளுமன்ற தேர்தல் முடிவு வந்த பிறகு மக்களுக்கு தெரியும்” இவ்வாறு கூறியுள்ளார்.