பச்சோந்தி போன்று கலர் மாறுபவர் ஓ.பன்னீர்செல்வம் - இபிஎஸ் விமர்சனம்
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறையாக அதிமுக தலைமையகம் சென்றார் எடப்பாடி பழனிசாமி.
இபிஎஸ் கடும் விமர்சனம்
அப்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டுமென்று பொதுக்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
File Picture
நீதிமன்ற உத்தரவுபடி தலைமைக் கழகம் அதிமுக வசம் ஒப்படைக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழுவில் கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது பொதுக்குழுவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் எங்கள் தரப்பில் உள்ளனர் என்று தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் கட்சி நலன் சார்ந்த விஷயங்களை செய்ய சசிகலா வரவேண்டும் என்று ஓபிஎஸ் கூறுகிறார் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த அவர், அவர் நினைத்து நினைத்து பேசுவார்.அவருக்கு சாதகமாக எது இருக்கிறதோ அதை சந்தர்ப சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் மாற்றி கொள்வார்.
பச்சோந்தியை விட அதிகம் கலர் மாறுபவர் ஓ.பன்னீர்செல்வம். தர்ம யுத்தம் எதற்கு செய்தார். அதனால் தான் கட்சி பிரிந்தது.
சட்டமன்றத்தில் அம்மாவின் இரத்தத்தை வேர்வையாக சிந்தி கடைமடை வரை சென்று வாக்காளர்களை சந்தித்து ஆட்யை உருவாக்கினார்கள்.
அந்த ஆட்சி என் தலைமையில் இருந்த போது நம்பிக்கை தீர்மானத்தில் எதிர்த்து வாக்களித்தவர் அண்ணன் ஓபிஎஸ்.இவர் கட்சிக்கு விசுவாசம் கிடையாது என்று விமர்சனம் செய்தார்.
திருகோணமலையில் பரபரப்பு! அகற்றப்பட்ட புத்தர் சிலை: காலவல்துறையினரின் கன்னத்தில் அறைந்த பிக்கு IBC Tamil