ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு

ADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Irumporai Aug 25, 2022 11:18 AM GMT
Report

அதிமுக தலைமை அலுவலகத்தில் புகுந்து ஆவணங்களை திருடியதாக சிவி சண்முகம் அளித்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அதிமுக பொதுக்குழு

அதிமுக ஜூலை 11 பொதுக்குழு செல்லாது எனவும் மீண்டும் பொதுக்குழு நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் என்று அறிவுறுத்திய உயர்நீதிமன்றம், கட்சியில் ஜூன் 23 க்கு முன்பு இருந்த நிலையே தொடர உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு | Ops Vaithilingam Rayapetta Police Station

ஓபிஎஸ்- ஈபிஎஸ் மோதல்

பொதுக்குழு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் கடந்த மாதம் 11 ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலின் போது அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் திருடிச்சென்றதாக சிவி சண்முகம் தரப்பில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படிருந்தநிலையில்.

சிவி சண்முகம் அளித்த புகாரின் அடிப்படையில் ஓ பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.