டெல்லியில் இருந்து வந்த கால்...நாளை களத்தில் இறங்கும் ஓபிஎஸ்..!!
நாளை ஆதரவாளர்களுடன் சென்னையில் அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
கூட்டணி விவகாரம்
புதிய கூட்டணியை அமைக்கும் நிர்பந்தத்தில் தள்ளப்பட்டிருக்கும் தமிழக பாஜக அதற்கான பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றது. ஏற்கனவே தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளுடன் முதலில் பாஜக பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவுடன் சில கட்சிகள் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேறினாலும், ஓபிஎஸ் அணி மற்றும் டிடிவி போன்றோர் திமுக மற்றும் அதிமுக எதிர்ப்பில் உறுதியாக இருக்கும் சூழலில் அவர்கள் பாஜக கூட்டணி செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது.
ஓபிஎஸ் ஆலோசனை கூட்டம்
இந்நிலையில், டெல்லி பாஜக தலைமை ஓபிஎஸ் அணியுடன் தொடர்புகொண்டு கூட்டணி குறித்து விவாதித்தாக கூறும் நிலையில், ஓபிஎஸ் நாளை சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு கிடைத்த ஒரே வெற்றி ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் என்பதால் மீண்டும் தனது பலத்தை நிரூபிக்க இந்த தேர்தலை பயனப்டுத்தி கொள்ளலாம்.
அவருக்கு பக்கபலமாக டிடிவி மற்றும் பாஜக வரும் நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கும் என்றே கூறலாம். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ்'ஸின் ஆதரவாளர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன்,மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.