அதிமுகவை பண்ருட்டி ராமச்சந்திரன் காப்பாத்துவாருனு நினைக்குறதுலாம் வேடிக்கை - முன்னாள் அமைச்சர்!
பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுகவை காப்பாற்றுவேன் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆர்.காமராஜ்
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடை கண்டித்து அதிமுக சார்பில் மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமை தாங்கினார்.
இதில் அவர் பேசியதாவது, ”திமுக அரசு, அதிமுக கொண்டு வந்த பல மக்கள் நலத் திட்டங்களை நிறுத்தியது மட்டுமல்லாமல் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை, திமுக அரசுக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று கூறியுள்ளார்.
ஓபிஎஸ் பேசாதது ஏன்
மேலும் சென்னையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திமுக குறித்து ஓபிஎஸ் பேசாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் தேமுதிக, பாமக கட்சிகளில் எம்எல்ஏவாக இருந்து
எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்த பண்ருட்டி ராமச்சந்திரன் தற்போது ஒபிஎஸ் உடன் இணைந்து எம்ஜிஆர் கட்சியை காப்பாற்ற போவதாக கூறுவது வேடிக்கையாக இருப்பதாகவும் கூறினார்.