ஓபிஎஸ் சகோதரர் மீது ஆள்கடத்தல் புகார்?
தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜா மீது ஆள்கடத்தல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மரப் பொருட்கள் விற்கும் நிறுவனத்தை நடத்தி வருபவர் பழனி. இவரிடம் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா மற்றும் அவரது மகன் அமர்நாத் ஆகியோர் மரச்சாமான்கள் வாங்கியுள்ளார்.
அதற்கான நிலுவை தொகை ஒரு கோடியை ராஜா வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. நிலுவை தொகையினை பழநி கேட்டுள்ளார். அப்போது ராஜாவும், அமர்நாத்தும் பழநியை திருச்சிக்கு கடத்தி சென்று மிரட்டி வெற்று பத்திரத்தில் மிரட்டி கையெழுத்து வாங்கியுள்ளதாக காரைக்குடி டிஎஸ்பியிடம் பழனி புகாரளித்துள்ளார்.
இதனையடுத்து பழநி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.