முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் 4 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று கூடியது.
சட்டப்பேரவை கூடியதும் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழக டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதாயளனுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து துறை அமைச்சர்கள் கேள்வி நேரத்திற்கு பதில் அளித்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து எதிர்கட்சி துணைத்தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.
அப்போது அவர் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து, 5 மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ள முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், அனைத்து அணைகளும் அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தான் வருகின்றன என்றும் அணை பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வர இன்னும் ஓராண்டு ஆகும் என்றும் விளக்கமளித்தார்.