திமுகவில் இணைகிறார் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ்..!
அதிமுகவில் இருந்து விலகிய கோவை செல்வராஜ் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் இருந்து விலகல்
ஓபிஎஸ் அணியில் இருந்த கோவை செல்வராஜ் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். அதே சமயம் திராவிட பாரம்பரியத்தை விட்டு விலக மாட்டேன், நல்ல முடிவை விரைவில் அறிவிப்பேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கோவை செல்வராஜ், என்னோட 50 வருட அனுபவத்தில் எனக்கு எல்லா கட்சியோட வரலாறும் தெரியும்.

இனி இவர்களோடு சேர்ந்து பயணித்தால் கேவலம் தான் எனவே அதிமுக வேண்டாம் என முடிவு செய்துவிட்டேன். திமுக வெறுக்க கூடிய கட்சி இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றாக செயல்படுகிறார்.
திமுகவில் இணைவது உறுதி
திமுகவில் மட்டும் தான் இன்றைக்கும் திராவிட பாரம்பரியம் உள்ளது. அதனால் திமுகவில் இணைவது தப்பில்லை. என்னோட நண்பர்களுடன் கலந்து பேசி எல்லாரும் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்துவிட்டு முடிவெடுப்பேன் என அந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கோவை செல்வராஜ் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.