கசந்த திருமண வாழ்க்கை....விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற ஓபிஎஸ் மகன்
ஓபிஎஸ் மகனும், தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார் தனது மனைவியிடம் விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ரவீந்திரநாத் குமார்
அதிமுகவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரான, முன்னாள் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரின் மகன் ரவீந்திரநாத் குமாரின் திருமண வாழ்க்கை கசந்துள்ளது. ஆனந்தி என்பவருடன் திருமணமான ரவீந்திரநாத் குமாருக்கு 3 பிள்ளைகளும் உள்ளனர். அண்மைகாலமாகவே தம்பதிகள் இருவருக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளது.
இது அவ்வப்போது இருவருக்கும் சண்டையாகவும் மாறியிருக்கின்றது. இது தொடர்பாக இருதரப்பிடமும் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், தான் தற்போது சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் ரவீந்திரநாத் குமார் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
கருத்து வேறுபாடு
அவர் தாக்கல் செய்த மனுவில், கருத்து வேறுபாடு என்ற காரணத்தைக் கூறி விவாகரத்து கோரியுள்ளார். இந்த மனு தற்போது குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு எண்ணிடப்பட்டுள்ளது.
விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரவுள்ளது. ஆனால் ரவீந்திரநாத் குமாரின் மனைவி ஆனந்தி தரப்பில் இருந்து எந்த மனுவும் தாக்கல் செய்திட நிலையில், விரைவில் அவர்கள் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.