ஊர்ந்து ஊர்ந்து முதலமைச்சரானவர்...துரோக பழனிசாமி - ஓபிஎஸ்..!!
ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், ஊர்ந்து ஊர்ந்து முதலமைச்சரானவர் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், காஞ்சிபுரத்தில் ஆலோசனை நடத்தினார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய ஓ பன்னீர்செல்வம், இபிஎஸ் தாமாக முன் வந்து பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும் என எச்சரித்து, தமிழ்நாட்டில் உள்ள அத்தனை தொண்டர்களும் வெகுண்டெழுந்து சட்டவிதிகளை எப்படி மாற்றலாம் என கூறி கடும் கோபத்தில் உள்ளனர் என கடுமையாக விமர்சித்தார்.
பழனிசாமி இந்த கட்சியை தொடங்கினாரா..? வளர்த்தாரா..? கட்சிக்காக தியாகம் செய்தாரா..? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி, எதுவும் இல்லை என்று குறிப்பிட்டு, முதலமைச்சராக எப்படி ஊர்ந்து, ஊர்ந்து பதவி வாங்கினார் என்பதை இந்திய திருநாடே கூர்ந்து கவனித்தது என்றார்.
உரிமையை மீட்டு....
பதவி கொடுத்த சசிகலாவையே தரக்குறைவான வார்த்தையில் பேசி நம்பிக்கை துரோகம் செய்தவர் பழனிசாமி என்று கூறி, தொண்டர்களால் உருவான இயக்கத்தை தான் மட்டுமே எல்லா பதவியும் கையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பழனிசாமி நினைக்கிறார் என்றும் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், இதற்கெல்லாம் முடிவுக்கட்டி இயக்கத்தின் உரிமையை மீட்டு, பொதுச்செயலாளர் பதவி, மிட்டாதாரர்கள், மிராசுதாரர்களுக்குதான் பட்டம் பதவி இல்லை என்றும் அனைவரும் பதவிக்கு வர வேண்டும் என்று எம்ஜிஆர் விரும்பியதாகவும் கூறினார்.