அவர் புரட்சி தமிழரா?....எடப்பாடி பற்றிய கேள்வி...கடுப்பான ஓபிஎஸ்
அதிமுக மாநாட்டில் இபிஎஸ்'ஸிற்கு புரட்சி தமிழர் என பட்டம் அளிக்கப்பட்ட நிலையில், அது குறித்து கேள்வி கேட்கப்பட்டு போது ஓபிஎஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுக மாநாடு
நேற்று மதுரை வலையங்குளம் பகுதியில், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவின் மாநில மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் 32 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கியமானதாக திருக்குறளை தேசிய நூலக அங்கீகரிக்கவேண்டும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும், தமிழை கட்டாயப்பாடமாக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில் இபிஎஸ்'ஸிற்கு புரட்சி தமிழர் என்ற பட்டமும் அளிக்கப்பட்டது. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா வழியில் தற்போது கட்சியின் அடுத்த பொதுச்செயலாளராகியிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
கடுப்பான ஓபிஎஸ்
இந்நிலையில், சென்னையில் வேப்பேரியில் ஓபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்'ஸிடம் எடப்பாடிக்கு புரட்சி தமிழர் என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளதை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதற்கு பதிலளித்த அவர், ரட்சி தமிழர் என எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும், அதிமுக மதுரை மாநாடு தோல்வி அடைந்துவிட்டது அவர்களின் வேடம் களைந்திருக்கிறது என ஓபிஎஸ் கூறினார்.