என்னை மன்னிப்பு கடிதம் கொடுக்க சொல்ல எடப்பாடி யார்? ஓபிஎஸ் கடும் சாடல்!
என்னை மன்னிப்பு கடிதம் கொடுக்க சொல்ல எடப்பாடி யார்? என ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
எடப்பாடி யார்?
மதுரையில் இருந்து சென்னை செல்ல முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் தான் கள்ளச்சாராயத்தை முழுமையாக ஒழிக்க முடியும்.
இதனை அரசு செய்ய வேண்டும்.. அ.தி.மு.க. தொண்டர்களை சந்திக்கும் சசிகலா முயற்சியை வரவேற்கிறோம். மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் ஓபிஎஸ்ஐ சேர்க்க மாட்டோம் என்று எடப்பாடி கூறுகிறார். என்னை மன்னித்து கடிதம் கொடுக்கச் சொல்ல அவர் யார்.?
ஓபிஎஸ் கடும் சாடல்
எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் போட்டியிடவில்லை,
அதனால் இரட்டை இலையுடன் மாங்கனி இருக்கிறது. அதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.. எடப்பாடி பழனிசாமி போல் சர்வாதிகாரத்தோடு பேச மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.