முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் செயலால் ஆடிப்போன ஓபிஎஸ் தரப்பு..!
தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு முன்னிலையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஈபிஎஸ் தரப்பில் ஆஜரான ஜெயக்குமார் செய்த செயலால் ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான கோவை செல்வராஜ் அதிர்ச்சியடைந்தார்.
அனைத்துக்கட்சி கூட்டம்
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் புதிய நடைமுறை தமிழகம் முழுவதும் தொடங்குகிறது. இப்பணிகளை கையாள்வது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் அனைத்து கட்சியினர் சார்பிலும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ஜெயக்குமார் செயலால் பரபரப்பு
அதிமுக சார்பில் ஓபிஎஸ் தரப்பில் இருந்து கோவை செல்வராஜ் முதல் நபராக கூட்ட நடைபெறும் இடத்திற்கு வந்தார். இதையடுத்து ஈபிஎஸ் தரப்பில் கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் வந்தனர்.

அப்போது அதிமுக பெயர் பலகையை எடுத்த ஜெயக்குமார் தங்கள் இருக்கை முன்பு வைத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கூட்டத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, பரந்தாமன்,காங்கிரசிலிருந்து தாமோதரன், நவாஸ், பாஜகவின் சார்பில் கரு.நாகராஜ், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan
கல்முனை பிரபல பாடசாலையில் மாணவர்களிடம் அங்கசேட்டை: பொது சுகாதார பரிசோதகரை கைது செய்ய வலைவீச்சு IBC Tamil