ஈபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு
எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகம் செல்ல எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான புகழேந்தி புகார் அளித்துள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகம் செல்லும் ஈபிஎஸ்
கடந்த மாதம் 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்றார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கபட்ட நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் சீல் அகற்றப்பட்டு சாவி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு
பின்னர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணிக்கு தலைமை அலுவலகத்திற்கு செல்ல உள்ளார்.

இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சிபிசிஐடி விசாரணை உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் எடப்பாடி பழனிசாமியை அதிமுக அலுவலகத்தில் அனுமதிக்கக்கூடாது என்று புகார் மனு அளித்துள்ளார்.
திருகோணமலையில் பரபரப்பு! அகற்றப்பட்ட புத்தர் சிலை: காலவல்துறையினரின் கன்னத்தில் அறைந்த பிக்கு IBC Tamil
யுத்தக்காலத்தில் கூட மதஸ்தலங்களில் புலிகள் கை வைக்கவில்லை: அமைச்சரை கண்டித்த சாணக்கியன் எம்.பி IBC Tamil