முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம் , ஓபிஎஸ் தரப்பு மண் குதிரை : ஜெயக்குமார் கிண்டல்
சென்னையில் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹுவை சந்தித்த பின், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
போலி வாக்காளர்கள்
அப்போது பேசிய ஜெயக்குமார் : ஈரோடு கிழக்கு தொகுதியில் 238 பூத்கள் உள்ளன.அதில் போலியான வாக்குகள் செலுத்த முயற்சி நடப்பதாக கூறினார். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 40 ஆயிரம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும்
ஜெயக்குமார் கிண்டல்
ஆகவே வாக்குகளை சரி பார்க்க மனு அளித்துள்ளதாக கூறினார். மேலும்,செய்தியாளர்கள் ஈரோடு கிழக்கில் பாஜக வேட்பாளரை நிறுத்தினால், அதிமுக வேட்பாளர் திரும்பப்பெறப்படுமா? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு நாங்கள் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார். மேலும், ஓபிஎஸ் தரப்பு மண் குதிரை; கரை சேராது என்றும் விமர்சித்துள்ளார்