ஒரே காரில் ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன்; உருவாகும் புதிய அணி!
ஓபிஎஸ், தினகரன் மற்றும் செங்கோட்டையன் ஒரே காரில் பயணித்துள்ளனர்.
ஓபிஎஸ்-செங்கோட்டையன்
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த மாதம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கலகக்குரல் எழுப்பினார்.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி 10 நாட்கள் கெடு விதித்தார். செங்கோட்டையனின் இந்த முயற்சிக்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனை பதவியில் இருந்து நீக்கினார். இந்நிலையில், செங்கோட்டையன், இன்று திடீரென ஓபிஎஸ்ஸை சந்தித்துள்ளார்.
உருவாகும் அணி
மதுரை வந்த செங்கோட்டையன், ஓபிஎஸ் உடன் ஒரே காரில் பசும்பொன் பயணித்து வருகிறார். பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளனர்.

இதனிடையே மானாமதுரை அருகே ஓபிஎஸ் - செங்கோட்டையன் பயணித்த கார் நிறுத்தப்பட்டுள்ளது. இவர்கள் டிடிவி தினகரனுக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது.
பின்னர் சசிகலாவையும் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதனால் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தனியாக புதிய அணியை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.