சட்டப்பேரவையில் ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை இன்று மாற்றம்? - சபாநாயகர் ஆலோசனை
சட்டப்பேரவையில் ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை குறித்து இன்று சபாநாயகர் அப்பாவு பரிசீலனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை மாற்றம்
அதிமுகவில் உட்கட்சி குழப்பம் தொடர்ந்து வரும் நிலையில், ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன் தினம் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதி இருந்தனர்.
இக்கடிதம் குறித்து சபாநாயகர் கூறுகையில், கடிதத்தை படித்த பின் இதுகுறித்து யார் மீதும் விருப்பு, வெறுப்பு இல்லாமல் உரிய நேரத்தில் முடிவு எடுப்பேன் என தெரிவித்தார்.

இந்த நிலையில், வரும் 17-ஆம் தேதி சட்டப்பேரவை கூடவுள்ளது. சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி இருக்கைக்கு பக்கத்து இருக்கையில்தான் இதுவரை ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்திருந்தார்.
தற்போது இருவருக்கு இடையே மோதல் நிலவுவதால், சட்டப்பேரவையில் ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை குறித்து இன்று சபாநாயகர் அப்பாவு பரிசீலனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.