இதற்காகவே விரைவில் சசிகலாவை சந்திப்பேன் - ஓ.பன்னீர் செல்வம் பேச்சு

ADMK V. K. Sasikala O. Panneerselvam
By Karthikraja Jul 20, 2024 10:30 AM GMT
Report

சசிகலாவை சந்திக்க உள்ளதாக ஓ பன்னீர் செல்வம் பேசியுள்ளார்.

ஓ.பன்னீர் செல்வம்

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் ஓ.பன்னீர் செல்வம். இந்த நிலையில் ராமேஸ்வரம் சென்று வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். 

o panner selvam latest speech

அப்பொழுது பேசிய ஓ.பன்னீர் செல்வம், இந்தியாவில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்தததால் தான் மக்கள் எனக்கு அதிக வாக்களித்தனர். எனவே பிரதமர் மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சசிகலா

தற்போது தமிழகத்தில் சாமானிய மக்கள் சுதந்திரமாக வெளியே செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. போதை பொருள் புழக்கம், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஆகியவை அதிகரித்துள்ளன. எனவே அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என பேசினார். 

opanner selvam with sasikala

மேலும் "அ.தி.மு.க. கட்சி ஆரம்பிக்கப்பட்டு 52 ஆண்டுகளில் 30 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி தான் நடைபெற்றுள்ளது. ஆனால் தற்போது அனைவரும் பிரிந்து இருப்பதால் தொடர்ந்து 10 தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்து வருகிறது.

தொண்டர்களுக்காக தொடங்கப்பட்ட இந்த கட்சி சிதைந்து விடக்கூடாது என, கட்சியினர் அனைவரையும் ஒன்றிணைக்க சசிகலா தொடங்கிய பயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பிரிந்து கிடக்கும் சக்திகளை இணைப்பதற்காக நான் சசிகலாவை விரைவில் சந்திக்க உள்ளேன்." என பேசியுள்ளார்.