டிடிவி தினகரனை சந்தித்து பேசுவேன் - ஓபிஸ் பரபரப்பு!
டிடிவி தினகரனை, ஓபிஎஸ் சந்தித்து பேசுவதாக கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக முன்னாள் அரசு கொறடா துரை.கோவிந்தராஜன் காலமானார். இதற்காக அவருக்கு அஞ்சலி செலுத்த ஓ.பன்னீர்செல்வம் விமானம் மூலம் திருச்சி சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,
அதிமுக எப்போதும் தொண்டர்களுக்கான இயக்கமாகத்தான் இருந்திருக்கிறது. எந்த நேரத்திலும் தொண்டர்களாஇ பிளவுபடுத்தி பார்க்க முடியாத வகையில்தான் நிலைத்து நிற்கிறது. திமுகவின் ஒற்றுமையை பாஜக குலைக்கவில்லை.
பரபர கருத்து
யாராலும் அதிமுகவை மிரட்டவும் முடியாது. அதிமுக தொண்டர்களை பிளவுபடுத்தவும் முடியாது. அது நடக்கவும் நடக்காது. அதிமுகவின் இடத்தை பாஜக பிடிக்கப் பார்க்கிறது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
டிடிவி தினகரன் கருத்து நல்ல கருத்து. அதை வரவேற்கிறோம். தஞ்சாவூரில் அவரை சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டால் சந்தித்து பேசுவேன் என்று தெரிவித்துள்ளார்.