ஓபிஎஸ்ஸே கவலைப் படலை மற்றவர்கள் என்ன கவலை? : இல.கணேசன் பதிலடி

admk dmk bjp
By Jon Feb 18, 2021 01:27 PM GMT
Report

பிரதமர் மோடி முதல்வரை தனியாக சந்திதற்கு ஓபிஎஸ் கவலைப்படவில்லை என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார் கடந்த ஞாயிற்றுக் கிழமை பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்தார். அவருக்கு அதிமுகவினரும் பாஜகவினரும் பலத்த வரவேற்பு அளித்தனர். ரூ.8000 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தொடக்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியின் இறுதியில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கரங்களை பிடித்து உயர்த்தி, நாளை நமதே என்பதை குறிப்பால் உணர்த்தி விட்டுச் சென்றார்.

ஓபிஎஸ்ஸே கவலைப் படலை மற்றவர்கள் என்ன கவலை? : இல.கணேசன் பதிலடி | Ops Sad Ganesan Politician

இதனிடையே சென்னை கிளம்பும் போது, முதல்வர் பழனிசாமியை கிரீன் ரூமில் தனியாக சந்தித்து பேசினார் பிரதமர் மோடி. தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியானது. இந்த பேச்சு வார்த்தையில் ஓபிஎஸ், பங்கேற்காதது பல்வேறு கருத்துக்களை கிளப்பியது, ஓபிஎஸ்ஸை விட்டு ஈபிஎஸ் மட்டும் மோடி அப்படி என்ன பேசினார் எனபது பேசுபொருளானது.

இது குறித்து பேசியுள்ள இல.கணேசன், பிரதமரை முதல்வர் தனியாக சந்தித்ததற்கு ஓபிஎஸ்ஸே கவலைப் படாத போது மற்றவர்கள் ஏன் சிந்திக்க வேண்டும்? என பதிலடி கொடுத்துள்ளார். மேலும், டெல்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல; அவர்கள் இடைத்தரகர்கள் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.