பிரதமருடனான சந்திப்பு; திட்டவட்டமாக மறுத்த நயினார்; ஆதாரமாக SMS காட்டிய ஓபிஎஸ்
நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை ஓபிஎஸ் ஆதாரமாக காட்டியுள்ளார்.
மறுத்த நயினார்
பிரதமர் மோடி ஜூலை 26 ஆம் தேதி தமிழ்நாடு வந்த நிலையில், அவரை சந்திக்க முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கேட்டு இருந்தார். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அனுமதி தரப்படவில்லை என்று கூறப்பட்டது.
கூட்டணி கட்சி தலைவரான தன்னை சந்திக்க பிரதமர் மோடி மறுத்து அவமதிப்பதாக கருதிய அவர், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்தார்.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேட்ட போது, ஓபிஎஸ் என்னிடம் கூறியிருந்தால் பிரதமர் மோடியுடான சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருப்பேன் என்று கூறினார்.
SMS காட்டிய ஓபிஎஸ்
ஆனால், நயினார் நாகேந்திரனை 6 முறை போனில் தொடர்புகொள்ள நான் முயற்சித்தேன். அவர் தனது அழைப்பை எடுக்கவில்லை. அதனால் அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன் என ஓபிஎஸ் கூறினார்.
ஓபிஎஸ் சொல்வதில் உண்மையில்லை, நான்தான் ஓபிஎஸ்ஸை தொடர்புகொண்டேன். அவர் என்னை அழைக்கவில்லை என நயினார் நாகேந்திரன் மறுப்பு தெரிவித்தார்.
இதனையடுத்து, ஜூலை 12 ஆம் தேதி மற்றும் 24 ஆம் தேதி ஓ. பன்னீர் செல்வம் தங்களை சந்திக்க வேண்டும் என அனுப்பிய குறுஞ்செய்தியை ஓபிஎஸ் தனது செல்போனில் காட்டினார்.
இது குறித்து நயினார் நாகேந்திரனிடம் கேட்ட போது "ஆதாரமாக கொடுங்கள், செல்போனில் காட்ட வேண்டாம்" என கூறினார்.