ஆதரவாளர்கள் புடைசூழ ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் மரியாதை
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுக தலைவர்கள் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஜெயலலிதா நினைவுதினம்
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இன்று அவரது நினைவுதினம் என்பதால் ஏராளமான அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா சமாதியில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
ஓ.பிஎஸ் அஞ்சலி
இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அருங்காட்சியகம் அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றபடி ஓபிஎஸ் உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.

ஜெ.தீபா போயஸ்கார்டனில் அஞ்சலி
இதில் வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், மாவட்ட தலைவர்கள் சைதை எம்.எம்.பாபு, ரெட்சன் அம்பிகாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே, போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டில் ஜெ. தீபா ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்