இறுதி பிரச்சாரத்தில் பேக்கரியில் டீ குடித்து ரிலாக்ஸ் செய்த ஓபிஎஸ்!
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரம் காட்டி வந்தன. இந்நிலையில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளது. இதனையடுத்து, போடி அருகே மார்க்கையன் கோட்டையில் சூறாவளி சுற்றுப் பயணத்தின் இடைவெளியில் டீக்கடையில் அமர்ந்து துணை முதலமைச்சர் டீ அருந்தினார்.
தேனி மாவட்டத்தில் உள்ள போடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் போடி சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டு சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்தார்.
இன்று தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தொகுதியில் முருகனை ஆதாரித்தும் ஆண்டிபட்டி தொகுதியிலும், லோகிராஜன், எஸ்பிஎம் சையதுகானையும் ஆதரித்து பல்வேறு இடங்களில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு மக்களிடம் வாக்குகளை சேகரித்து வந்தார்.

இந்த மூன்று சட்டசபை தொகுதிகளில் பிரச்சாரத்தை முடித்து விட்டு, போடி சட்டமன்றத் தொகுதிக்கு இன்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது மார்க்கையன் கோட்டையில் உள்ள டீக்கடையில் துணை முதல்வர் டீ அருந்தினார். சிறிது நேரம் அங்கு ஓய்வு எடுத்து விட்டு கிளம்பினார்.