ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை கருத்து கூற மறுத்த ஓ.பன்னீர்செல்வம்

J Jayalalithaa ADMK AIADMK O. Panneerselvam
By Thahir Oct 20, 2022 10:55 AM GMT
Report

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் வழக்கு தொடர உள்ளதாக கேள்வி படுகிறேன். அதனால் அதன் மீது கருத்து கூற முடியாது என  ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தங்க கவச விவகாரம் 

வரும் அக்டோபர் 30ஆம் தேதி முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக அதிமுக கட்சி சார்பாக முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசம் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது.

தற்போது இபிஎஸ் – ஓபிஎஸ் என இரு அணியினராக இருப்பதால், இரு தரப்புமே தங்க கவசத்தை தங்கள் வசம் ஒப்படைக்குமாறு வங்கி தரப்பினரிடம் கோரிக்கை வைத்தனர்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை கருத்து கூற மறுத்த ஓ.பன்னீர்செல்வம் | Ops Refused To Comment On Jayalalithaa Death

இந்த விவகாரம் மதுரை உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 26ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதுகுறித்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ஓபிஎஸ் , ‘ அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. தீர்ப்பு வரும் வரை எதுவும் என்னால் சொல்ல முடியாது.’ என கூறிவிடுவார்.

பதில் கூற மறுத்த ஆறுமுகசாமி ஆணையம் 

மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையில் பற்றி கேட்டவுடன், ‘ விசாரணை அறிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் வழக்கு தொடர உள்ளதாக கேள்வி படுகிறேன். அதனால் அதன் மீது கருத்து கூற முடியாது.’ என பதில் கூறினார் ஓபிஎஸ்.

அடுத்து இபிஎஸ் குற்றசாட்டு பற்றி கேட்டவுடன், ‘ நான் முதல்வர் ஸ்டாலின் உடன் பேசியதை நிரூபித்து விட்டால் நான் அரசியலில் இருந்து வெளியேறிவிடுகிறேன். அதே போல நிரூபிக்க தவறினால் பழனிசாமி அரசியலில் இருந்து விலக தயாரா ? என ஏற்கனவே சவால் விட்டுவிட்டேன்.’ என கூறிவிட்டு சென்றார்.