‘’அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமி , சின்னம்மா ’’ - அழைப்பு விடுத்த ஓபிஎஸ்.. மீண்டும் இணையுமா இரட்டை இலை சொந்தங்கள் ?
எங்களுடைய எண்ணம், செயல் இணைப்பு, இணைப்பு, இணைப்புதான் என்று ஒரேடியாக சமாதான தூதினை செய்தியாளர்கள் சந்திப்பில் ஒபிஎஸ் கூறியுள்ளார்.
ஓபிஎஸ்க்கு சாதகமான தீர்ப்பு
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பு வழங்கினார்.
அந்த தீர்ப்பில், அதிமுகவில் ஜூன் 23-ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்கும். ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டமும், அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லாது என உத்தரவிட்டார்.

இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த ஓபிஎஸ் அவர்கள், அனைவரும் ஒன்றுபட வேண்டும்; அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
ஜூன் 23ம் தேதிக்கு முன் யாரெல்லாம் கட்சியில் இருந்தார்களோ அவர்கள் தொடர்ந்து கட்சியில் இருப்பார்கள் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் :
கருத்து வேறுபாடுகள் நீக்கி விட்டு அதிமுகவினர் ஒன்று பட வேண்டும் என்றும் இன்றைய சூழலில் அதிமுக ஒன்றுபட்டு தேர்தலை சந்தித்தால் யாராலும் வெல்ல முடியாது என கூறிய ஒபிஎஸ் .
கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும்
கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும் ,நடப்பவை நல்லவையாக இருக்க வேண்டும் எனக் கூறிய ஓபிஎஸ் அன்பு சகோதர் எடப்பாடி பழனிசாமி நானும் இணைந்து சிறப்பாக அதிமுகவை சிறப்பாக வழிநடத்தினோம்.ஆகவே மீண்டும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வருமாறு எடப்படி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார்.

அப்போது செய்தியாளர்கள் ஒபிஎஸ்ஸிடம் கட்சியிலிருந்து நீக்கபட்டவர்கள் சேர்க்கப்படுவர்கள் என்றால் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுகவில் மீண்டும் இணைக்கப்படுவார்களா ?
அன்பு சகோதரர்( எடப்பாடி பழனிசாமி பெயரை ) சொல்லும் நீங்கள் சசிலா பெயரை சொல்ல தயங்குவது ஏன்?என கேள்வி எழுப்பினர்.
சின்னமாவும் இருக்காங்க டிடிவி தினகரனும் உள்ளார்
அப்போது சற்று கோபமான ஓபிஎஸ் : ‘‘எங்க நான் யாரக இருந்தாலும் சொல்லிட்டேன் ல அதில் சின்னமாவும் இருக்காங்க டிடிவி தினகரனும் உள்ளார்’’ என பதில் கொடுக்க உடன் இருந்த தொண்டர்கள் ஆரவாரம் எழுப்பினர்.
ஆக தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்த போதும் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் ஓபிஎஸ் கூறிய முக்கிய வார்த்தைகள் அன்பு சகோதர் எடப்பாடி பழனிசாமி , சின்னமா , டிடிவி தினகரன் .

தற்போது கலைந்து போன சீட்டு கட்டாக உள்ள அதிமுகவினை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதை செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் ஓபிஎஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதே சமயம் அதிமுகவில் முந்தைய நிலையே தொடரும் என்ற உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.