எனது அரசியல் எதிர்காலம் சார்ந்தது..!! நீதிமன்றத்தில் முறையிட்ட ஓபிஎஸ்!!
அதிமுக பொதுக்குழு வழக்கில் தொடர்ந்து முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் நீதிமன்றப்படிகளை ஏறி வருகின்றார்.
ஓபிஎஸ்
கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதையும், தன்னை கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்தும் தொடர்ந்து நீதிமன்ற படிகளை ஏறி வருகின்றார் ஓபிஎஸ்.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு சாதகமான தீர்ப்பினை அளிக்க, மேல்முறையீடு செய்து வருகின்றார் ஓபிஎஸ். சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி பொதுக்குழு தீர்மானம் செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
அரசியல் எதிர்காலம்
இந்த வழக்கை எதிர்த்து மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடினார் ஓபிஎஸ். அவ்வழக்கின் விசாரணை நேற்று வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில், நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வரும் நிலையில் தேர்தல் பணிகளை மேற்கொள்ளவும், இந்த வழக்கு தனது அரசியல் எதிர்காலத்தை சார்ந்தது என்பதால் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்கவும் கோரிபட்டுள்ளது.
இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி 16-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.