ஓபிஎஸ் மேல்முறையீடு மனு இன்று விசாரணை
அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு பட்டியலிட்டு சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் ரத்து செய்வது தொடர்பாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒற்றை நீதிபதி குமரேஷ் பாபு அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து , அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட கூடாது என்று கூறி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்நிலையில், வழக்கில் அசல் ஆவணங்களை சமர்ப்பிக்க இயலாததால், மின்னணு ஆதாரங்களை சமர்ப்பிப்பதாக ஓபிஎஸ் தரப்பில் கோரப்பட்டு இருந்தது.
இதனை ஏற்று, சென்னை உயர்நீதிமன்ற இரட்டை நீதிபதி அமர்வு இன்று இந்த ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என கூறியுள்ளது.
இதற்கிடையில் இந்த மேல்முறையீடு வழக்கு தொடர்பாக, தனது தரப்பு வாதங்களையும் கேட்க அனுமதிக்கும், கேவியேட் மனுவை இபிஎஸ் தரப்பு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.