இயக்குநர் பாரதிராஜாவை நேரில் நலம் விசாரித்தார் ஓ.பன்னீர்செல்வம்

Chennai O. Panneerselvam Bharathiraja
By Thahir Sep 29, 2022 01:02 PM GMT
Report

இயக்குநர் பாரதிராஜாவை நேரில் நலம் விசாரித்தார் ஓ.பன்னீர்செல்வம்.

நலம் விசாரித்த ஓ.பி.எஸ் 

கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

குணமடைந்த நிலையில் பாரதிராஜா வீடு திரும்பினார். அவரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் இயக்குநர் பாரதிராஜா மீண்டும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார்.

இயக்குநர் பாரதிராஜாவை நேரில் நலம் விசாரித்தார் ஓ.பன்னீர்செல்வம் | Ops Personally Inquired After Bharathiraja

இது குறித்து அறிந்த நடிகர் கமல்ஹாசன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாரதிராஜாவை நலம் விசாரித்தார்.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் பாரதிராஜாவின் வீட்டிற்கு நேரில் சென்று உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார்.