ஓபிஎஸ், பீகார், ஒடிசா என்று எங்கு போனாலும் அதை பற்றி கவலையில்லை - ஜெயக்குமார் விமர்சனம்
ஓபிஎஸ், பீகார், ஒடிசா என்று எங்கு போனாலும் அதை பற்றி கவலையில்லை அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் ஈவேரா திருமகன் உயிரிழந்தை அடுத்து வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனை அடுத்து பிரதான கட்சிகள் இடைத்தேர்தலுக்கான வேலையில் தீவிரமாக களமிறங்கி உள்ளனர். இந்த நிலையில் ஆளும் கட்சியான திமுக தனது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியை ஒதுக்கியுள்ளது.
ஆதரவு திரட்டும் ஓபிஎஸ் - இபிஎஸ் அணியினர்
இந்த நிலையில் எதிர்க்கட்சியான அதிமுகவும் நேரடியான தங்களது வேட்பாளர்களை நிறுத்த வியூகம் கொண்டு கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட போவதாக தெரிவித்தார்.
இந்த பரபரப்பான சூழலில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், செங்கோட்டையன், தங்கமணி, வளர்மதி உள்ளிட்டோர் பாஜகவின் தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதே போன்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய அணியினர் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் அண்ணமாலை மற்றும் பாஜக மூத்த நிர்வாகிகளை சந்தித்து பேசினர்.
இதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பாஜக நிர்வாகிகளை சந்திக்க குஜராத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயக்குமார் விமர்சனம்
இந்த நிலையில் அதிமுக மூத்த அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கோகுல இந்திரா, வளர்மதி, பெஞ்சமின் உள்ளிட்டோர் சென்னை தி.நகரில் உள்ள இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதனுடன் சந்தித்து பேசினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.ஜெயக்குமார், திமுகவின் 'B' டீமாக ஓபிஎஸ் செயல்படுகிறார். ஓபிஎஸ், பீகார், ஒடிசா என்று எங்கு போனாலும் அதை பற்றி கவலையில்லை.
ஓபிஎஸ் வேட்பாளரை நிறுத்தினால் சுயேட்சை வேட்பாளராக தான் கருத முடியும்.
ஓபிஎஸ் நிறுத்தும் வேட்பாளர் நோட்டாவை விட குறைவான வாக்குகளை தான் பெறுவார் என விமர்சனம் செய்தார்.
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan