ஓபிஎஸ் எனது பழைய நண்பர் - TTV தினகரன்

TTV Dhinakaran
By Irumporai Feb 23, 2023 09:54 AM GMT
Report

அதிமுக பொதுக்குழு வழக்கிற்கான உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வந்துள்ளது.இதனால் அவரது தொண்டர்கள் ஆரவாரத்துடன் இந்த தீர்ப்பை வரவேற்றனர். மேலும் இந்த தீர்ப்பு குறித்தும், அதிமுக பொதுக்குழு குறித்தும் அமமுக கட்சி தலைவர் TTV தினகரன் சில கருத்துகள் கூறியுள்ளார்.

 பிரிந்த அதிமுக

தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி, செல்வி.ஜெ.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கட்சி உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கட்சியை வழிநடத்தி சென்றனர்.

ஓபிஎஸ் எனது பழைய நண்பர் - TTV தினகரன் | Ops My Old Friend Ttv Dhinakaran

நடந்துமுடிந்த நாடளுமன்ற தேர்தலுக்கு பின், ஏற்பட்ட உட்கட்சி பூசலில் அதிமுக இரண்டாக பிளவுற்றது. இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் என அவர்களின் ஆதரவாளர்கள் பிரிந்தனர்.

  பொதுக்குழு தீர்மானம்

மேலும் கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்று தேர்ந்தடுக்கும் பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டார்.

ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக அந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

நீதிமன்றம் தீர்ப்பு 

இதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரக இருக்கும் போது தனது அனுமதி இல்லாமல் பொதுகுழுக்கூட்டம் கூட்டியது செல்லாது என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொதுக்கூட்டம் நடந்தது செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது.

 எந்த தொடர்பும் இல்லை

இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று காலை தீர்ப்பு வழங்கியது. அதில், உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பு செல்லும் என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எடப்பாடி ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஓபிஎஸ் எனது பழைய நண்பர் - TTV தினகரன் | Ops My Old Friend Ttv Dhinakaran

இந்நிலையில்,அமமுக தலைவர் TTV.தினகரன்செய்தியாளர்களிடம் கூறுகையில் “ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் இன்னும் எங்களுடன் தான் இருக்கிறார்கள். அவர்களிடம் இருக்கும் கட்சியினர் உண்மையான அதிமுகவே இல்லை” மேலும், மூன்று முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ் தனது முன்னாள் நண்பர் என்றும் கூறியுள்ளார்.

மேலும்,வரும் காலத்தில் அமமுக கட்சி தான் ஜெயலலிதாவின் கொள்கைகளைச் சிந்தனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும்.. இந்தப் பணிகளில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடுவோம். இந்த தீர்ப்பிற்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. என்று அமமுக தலைவர் TTV.தினகரன் கூறியுள்ளார்.