துணை முதல்வர் மற்றும் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு

By Fathima Apr 12, 2021 05:32 PM GMT
Report

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் அ.வள்ளியம்மாள் சமீபத்தில் இயற்கை எய்தினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்தனர். இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் அவர்களின் இல்லத்திற்கு நேரடியாக சென்று மறைந்த வள்ளியம்மாளின் திரு உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவரது மாமியார் வள்ளியம்மாள் மறைவுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

வள்ளியம்மாள் ஆன்மா சாந்தியடைய மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.