ஓபிஎஸ் மாநாட்டிற்கு அழைப்பு; நினைத்தது பலிக்குமா - சசிகலா அதிரடி பதில்
ஓபிஎஸ் சந்திக்க நேரம் கேட்டால் நிச்சயம் வழங்குவேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.
சசிகலா
ஓ பன்னீர் செல்வம், வரும் 23 ஆம் தேதி திருச்சியில் முப்பெரும் விழா நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதற்கு சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று கூறி வருகிறார்.
இந்நிலையில், அம்பேத்கர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஓபிஎஸ் சந்திக்க நேரம் கேட்டால் நிச்சயம் வழங்குவேன். மாநாட்டிற்கு அழைத்தால் அது குறித்து பிறகு முடிவெடுக்கப்படும். நான் எல்லாருக்கும் பொதுவான நபர்.
மாநாடு?
எனக்கு இது சொந்த ஊர் அது சொந்த ஊர் என்று நினைத்தது கிடையாது. ஜாதியிலும் அப்படி நினைத்தது கிடையது. அப்படி நினைத்தால் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவரை நான் முதல்வராக கொண்டு வந்து இருக்க மாட்டேன். என்னுடைய வழி தனி வழியாகவே இருக்கும்.
நான் முதலிலில் இருந்தே அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றுதான் சொல்லி வருகிறேன். திமுக சட்டசபையிலே இரட்டை வேடம் போடுகிறது. கோடநாடு வழக்கை அரசியலுக்காக திமுக பயன்படுத்தி வருகிறது.
கோடநாடு வழக்கு இப்போதைக்கு முடியாது. அதிமுகவில் இருந்து விலகிய அனைவரையும் நான் ஒருங்கிணைப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.