திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!

O Paneer Selvam
By Fathima Feb 27, 2026 04:30 AM GMT
Report

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை தொடங்கி தனியாக செயல்பட்டு வந்தார்.

அதிமுக-வில் மீண்டும் இணைவதற்கு முயற்சித்ததாக கூறப்படும் நிலையில், எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக அரசின் சாதனைகளை பாராட்டி பேசினார்.

திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! | Ops Joined Dmk

இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்து கொண்டார், சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வருகைதந்த ஓ. பன்னீர்செல்வத்தை பூங்கொத்து கொடுத்து ஸ்டாலின் வரவேற்றார்.

ஓ. பன்னீர்செல்வத்துடன் அவரது மகனும் அதிமுக முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத், உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.

இந்த நிகழ்வின் போது தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவரும் இருந்தது குறிப்பிடத்தக்கது.